நூபுர் சர்மா(படம்: டிவிட்டர்) 
இந்தியா

நூபுர் சர்மாவுக்கு கொல்கத்தா காவல்துறை மீண்டும் சம்மன்

நபிகள் நாயகத்துக்கு எதிராக சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததால் உருவான வன்முறைக் கலவரம் குறித்து விசாரிக்க நேரில் ஆஜராகுமாறு  பாஜக முன்னாள் செய்தித் தொடா்பாளா் நூ

DIN

நபிகள் நாயகத்துக்கு எதிராக சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததால் உருவான வன்முறைக் கலவரம் குறித்து விசாரிக்க நேரில் ஆஜராகுமாறு  பாஜக முன்னாள் செய்தித் தொடா்பாளா் நூபுா் சா்மாவுக்கு கொல்கத்தா காவல் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

கடந்த மாத இறுதியில் ஞானவாபி மசூதி விவகாரம் தொடா்பான தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் நூபுா் சா்மா கலந்துகொண்டாா். அப்போது அவா் இஸ்லாமிய இறைத் தூதா் நபிகள் நாயகத்தை அவமதித்து பேசியதாகக் கூறப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் நூபுர் சர்மாவைக் கைது செய்யக்கோரி இஸ்லாமியர்கள் வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

இதுதொடா்பாக மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். இந்த விவகாரம் தொடா்பாக விசாரிக்க  ஜூன் 25-ஆம் தேதி ஆஜராகுமாறு நூபுா் சா்மாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளனா்.

முன்னதாக, கடந்த ஜூன் 20-ஆம் தேதி ஆஜராகுமாறு கொல்கத்தா காவல் துறை சம்மன் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவை ஒன்றிணைப்பவர்களுக்கு முழு ஒத்துழைப்பு! - ஓ.பன்னீர்செல்வம்

க்யூட்னஸ்... ஷாலின் ஜோயா!

கஜினி பாணியில் சிவகார்த்திகேயன்! அமரனை வெல்லுமா மதராஸி? திரை விமர்சனம்

உக்ரைனுடன் அமைதி பேச்சுவார்த்தை! பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிக்கும் ரஷியா!

ஆக்ஸ்போர்டில் உறங்கும் தமிழ் மாணவரைப் போற்றாமல் வருவது அறமாகுமா? - ஜி.யு. போப் கல்லறையில் முதல்வர் ஸ்டாலின்!

SCROLL FOR NEXT