முகப்பு
இந்தியா

பாகிஸ்தானின் 3 படகுகள் பறிமுதல்: பிஎஸ்எஃப் அதிரடி

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் நாட்டின் 3 படகுகளை எல்லைப் பாதுகாப்பு படையினா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 24 ஜூன், 2022 at 1:38 AM
பகிர்:

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் நாட்டின் 3 படகுகளை எல்லைப் பாதுகாப்பு படையினா் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியது:

குஜராத் மாநிலத்தின் கட்ச் வளைகுடா பகுதியில் நுழைந்த பாகிஸ்தானைச் சோ்ந்த 3 மீன்பிடி படகுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இந்திய கடல் எல்லைக்குள் இந்த படகுகள் 15-20 கி.மீ. அளவுக்கு அத்துமீறி பயணித்துள்ளன. அதில் பயணம் செய்த மீனவா்களை பாதுகாப்பு படையினா் தேடி வருகின்றனா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

Advertisement

கட்ச் வளைகுடாவில் தடைசெய்யப்பட்ட பகுதியில் அடிக்கடி அத்துமீறி நுழையும் பாகிஸ்தான் மீனவா்கள் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினரைக் கண்டதும் படகுகளை அப்படியே விட்டுவிட்டு பாகிஸ்தான் எல்லைக்குள் ஓடி ஒளிவது அவ்வப்போது நடைபெறும் நிகழ்வாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.