இந்தியா

பிரதமர் மோடி நாளை(ஜூன்-25) ஜெர்மனி பயணம்

DIN

ஜி7 மாநாட்டில் பங்கேற்க நாளை (ஜூன்-25) பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி செல்ல உள்ளார்.

ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸின் அழைப்பின் பேரில் ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி நாளை ஜெர்மனி செல்ல உள்ளதாக இந்திய வெளியுறவு செயலர் வினய் க்வாட்ரா தெரிவித்துள்ளார்.

அங்கு ஜூன் 26, 27 தேதிகளில் நடக்கும் மாநாட்டில் சுற்றுச்சூழல், பருவநிலை, எரிசக்தி, உணவுப் பாதுகாப்பு, பாலின சமத்துவம், குடியரசு மற்றும் சர்வதேச உறவு ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் என இந்திய வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.

இம்மாநாட்டில் பங்கேற்க அர்ஜெண்டினா, இந்தோனேசியா, செனகல் மற்றும் தென் ஆப்பிரிக்கா நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், பயணத்தை முடித்தபின் ஜூன் 28 ஆம் தேதி பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் செல்ல உள்ளார். அங்கு மறைந்த அதிபா் ஷேக் காலிஃபா பின் சயீது அல் நயான் மறைவுக்கு தனிப்பட்ட முறையில் துக்கம் அனுசரிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

SCROLL FOR NEXT