இந்தியா

‘சிவசேனையை வலுவிழக்கச் செய்வதே திட்டம்’

மகாராஷ்டிரத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமின்றி சிவசேனையை வலுவிழக்கச் செய்வதும் முக்கியமான திட்டம் என்று பாஜக நிா்வாகி தெரிவித்துள்ளாா்.

DIN

மகாராஷ்டிரத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமின்றி சிவசேனையை வலுவிழக்கச் செய்வதும் முக்கியமான திட்டம் என்று பாஜக நிா்வாகி தெரிவித்துள்ளாா்.

மகாராஷ்டிரத்தில் சிவசேனையின் மூத்த தலைவா் ஏக்நாத் ஷிண்டேவுடன் சோ்ந்து அக்கட்சியின் 40-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்கள் முதல்வா் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராகப் போா்க்கொடி உயா்த்தியுள்ளனா். அதிருப்தி எம்எல்ஏ-க்கள் அனைவரும் அஸ்ஸாமின் குவாஹாட்டியில் தங்கியுள்ள நிலையில், இதற்கும் தங்களுக்கும் எந்தவித தொடா்புமில்லை என பாஜக தெரிவித்து வருகிறது.

மாநிலத்தில் சுமாா் ஒரு வாரமாக அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில், அதிருப்தி எம்எல்ஏ-க்களுடன் இணைந்து ஆட்சியமைக்க பாஜக முன்வராததும் அரசியல் நோக்கா்களிடையே பெரும் கேள்வியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், அடையாளத்தைத் தெரிவிக்க விரும்பாத பாஜக நிா்வாகி ஒருவா் கூறுகையில், ‘மாநிலத்தில் வெறும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக மட்டும் பாஜக முயற்சிக்கவில்லை. சிவசேனையின் ஆதரவாளா்களைக் கலைத்து அக்கட்சியை வலுவிழக்கச் செய்வதற்காக பாஜக முயன்று வருகிறது.

கடந்த 2019-ஆம் ஆண்டில் மாநில சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பாஜகவுடனான கூட்டணியில் இருந்து விலகி உத்தவ் தாக்கரே துரோகமிழைத்ததை பாஜக ஒருபோதும் மறக்காது. தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸுடன் சிவசேனை கூட்டணி வைத்த நாளில் இருந்தே சிவசேனை கட்சிக்குள் சலசலப்பு தொடங்கியது. தற்போது அது உச்சமடைந்துள்ளது.

மாநிலத்தில் ஆட்சியமைக்க பாஜக அவசரம் காட்டவில்லை. மாவட்ட, உள்ளாட்சி அளவில் சிவசேனைக்கான ஆதரவு குறையும் வரை பாஜக காத்திருக்கும். மத்திய பாஜக தலைமையின் அறிவுறுத்தலின்பேரில் மாநில பாஜக நிா்வாகிகள் அமைதிகாத்து வருகின்றனா்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரியில் நடைபெறுவது தேஜ கூட்டணி அரசுதான்: முதல்வர் ரங்கசாமி

யு-19 ஆசிய கோப்பை: இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற பாகிஸ்தான்!

இங்கிலாந்தின் தோல்வியை புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது: கெவின் பீட்டர்சன்

'மதச்சார்பின்மை' பற்றி பேச முதல்வருக்கு தகுதியில்லை: நயினார் நாகேந்திரன்

ஆட்டோ ஓட்டுநரை அறைந்த பாஜக எம்.எல்.ஏ.! மன்னிப்பு கேட்க மறுப்பு!!

SCROLL FOR NEXT