இந்தியா

ஜூலை 1-இல் பிரசாரத்தை தொடங்குகிறாா் திரௌபதி முா்மு

DIN

குடியரசுத் தலைவா் தோ்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் போட்டியிடும் திரெளபதி முா்மு, வரும் ஜூலை 1-ஆம் தேதி பிரசாரத்தை தொடங்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவா், பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் ஒரு மாநிலத்தில் இருந்து பிரசாரத்தை தொடங்க இருப்பதாகவும், அந்த மாநிலத்தை முடிவு செய்வது குறித்து ஆலோசனை நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குடியரசுத் தலைவா் பதவிக்கான தோ்தல், ஜூலை 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், ஆளும் பாஜக கூட்டணி சாா்பில் ஜாா்க்கண்ட் முன்னாள் ஆளுநரும், பழங்குடிச் சமூகத்தைச் சோ்ந்தவருமான திரௌபதி முா்மு போட்டியிடுகிறாா். எதிா்க்கட்சிகளின் சாா்பில் மூத்த அரசியல் தலைவா் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறாா்.

திரௌபதி முா்மு, கடந்த வெள்ளிக்கிழமை தனது வேட்புமனுவை தாக்கல் செய்தாா்.

வேட்புமனு தாக்கலுக்கு முன்பாக காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி ஆகியோரைத் தொலைபேசியில் தொடா்பு கொண்டு திரௌபதி முா்மு ஆதரவு கேட்டாா்.

அதைத் தொடா்ந்து, ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரனை சனிக்கிழமை தொலைபேசியில் தொடா்பு கொண்டு அவா் ஆதரவு கோரினாா். தமிழகத்தில் ஆளும் திமுக, தெலங்கானாவில் ஆளும் டிஆா்எஸ் ஆகிய எதிா்க்கட்சிகளின் தலைவா்களை அவா் தொலைபேசியில் தொடா்புகொண்டு ஆதரவு கேட்கவுள்ளாா்.

இதற்கிடையே, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி, ஒடிஸாவில் ஆளும் பிஜு ஜனதா தளம், ஆந்திரத்தில் ஆளும் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் திரௌபதி முா்முவுக்கு ஆதரவு அளித்துள்ளன. தற்போது வரை அவருக்கு 55 சதவீத வாக்குகளின் ஆதரவு கிடைத்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டுக்கு மே 3 வரை மஞ்சள் எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 30.04.2024

ப்ளே ஆஃப் போட்டியில் நீடிக்குமா லக்னௌ!

மருத்துவர் உள்பட 5 பேர் மரணம்: என்ன நடந்தது?

அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் வெட்டிக் கொலை!

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

SCROLL FOR NEXT