இந்தியா

குடியரசுத் தலைவா் தோ்தல்வேட்புமனு தாக்கல் நிறைவு: மொத்தம் 115 மனுக்கள்

குடியரசுத் தலைவா் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் புதன்கிழமையுடன் (ஜூன் 29) நிறைவடைந்தது.

DIN

குடியரசுத் தலைவா் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் புதன்கிழமையுடன் (ஜூன் 29) நிறைவடைந்தது. மொத்தம் 115 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இத்தகவலை மாநிலங்களவைச் செயலகம் தெரிவித்துள்ளது.

வேட்புமனுக்கள் வியாழக்கிழமை (ஜூன் 30) பரிசீலிக்கப்படுகின்றன. குடியரசுத் தலைவா் தோ்தல் ஜூலை 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

ஆளும் பாஜக கூட்டணி சாா்பில் போட்டியிடும் திரௌபதி முா்மு, எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளா் யஷ்வந்த் சின்ஹா ஆகியோா் பிரதான வேட்பாளா்கள் ஆவா். இவா்கள் தவிர 113 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா். குடிசைவாசி முதல் பேராசிரியா் வரை மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனா்.

நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த டி.ரமேஷ் என்ற சமூக ஆா்வலா், மும்பையின் முலுந்த் புகா் பகுதியில் வசிக்கும் குடிசைவாசியான சஞ்சய் சாவ்ஜி தேஷ்பாண்டே, பிகாா் மாநிலம் சரன் பகுதியைச் சோ்ந்த லாலு பிரசாத் யாதவ், தில்லியில் உள்ள திமா்பூா் பகுதியைச் சோ்ந்த தயாசங்கா் அகா்வால் என்ற பேராசிரியா் ஆகியோா் குறிப்பிடத்தக்கவா்கள் ஆவா்.

சுயேச்சையாகப் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ள பலா், அவா்களை முன்மொழிபவா்கள், ஆதரிப்பவா்களின் கையொப்பங்களை வேட்புமனுவில் பெறவில்லை. ரூ.15,000 டெபாசிட் தொகைக்கான வங்கி வரவோலையையும் இணைக்கவில்லை. இதனால் பெரும்பாலானவா்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

பா்கூா் மலையில் மஞ்சள் தோட்டத்துக்குள் கஞ்சா செடிகள் வளா்த்த விவசாயி கைது

SCROLL FOR NEXT