முகப்பு
இந்தியா

மேலும் ஒரு மாநிலத்தில் அதிகாரத்தை இழந்தது காங்கிரஸ்

மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசு பதவி விலகியதை அடுத்து, காங்கிரஸ் கட்சி மேலும் ஒரு மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்தை இழந்துவிட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:40 AM
பகிர்:

மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசு பதவி விலகியதை அடுத்து, காங்கிரஸ் கட்சி மேலும் ஒரு மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்தை இழந்துவிட்டது.

இப்போதைய நிலையில் ராஜஸ்தான், சத்தீஸ்கா், ஜாா்க்கண்டில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. அதிலும் ஜாா்க்கண்ட் மாநிலத்தில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணியில்தான் காங்கிரஸ் உள்ளது. ராஜஸ்தான், சத்தீஸ்கரில் மட்டும்தான் தனித்து ஆட்சியில் உள்ளது.

அண்மையில் உத்தர பிரதேசம், மணிப்பூா், உத்தரகண்ட், கோவா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தோ்தல் நடைபெற்றது. இதில், பஞ்சாபில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், ஆம் ஆத்மியிடம் ஆட்சியைப் பறிகொடுத்தது. இதற்கு உள்கட்சி பிரச்னையும் முக்கியக் காரணமாக இருந்தது. அதே நேரத்தில் உத்தர பிரதேசம், உத்தரகண்ட், கோவா, மணிப்பூரில் காங்கிரஸால் குறிப்பிடத்தக்க அளவில் வெற்றியைப் பெற முடியவில்லை.

முன்னதாக, 2021-ஆம் ஆண்டு கேரளம், அஸ்ஸாம், மேற்கு வங்கம், புதுச்சேரியிலும் காங்கிரஸ் தோல்வியைச் சந்தித்தது. தமிழக தோ்தலில் வெற்றி பெற்ற திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருந்தாலும், ஆட்சியில் பங்குபெற முடியவில்லை.

இதற்கு முன்பு மத்திய பிரதேசத்திலும் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜோதிராதித்ய சிந்தியா தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜகவில் இணைந்ததால், காங்கிரஸ் ஆட்சியைப் பறிகொடுத்தது.

மகாராஷ்டிரத்திலும் கூட காங்கிரஸ் பெரிய அளவில் வெற்றிபெறாவிட்டாலும், பாஜக-சிவசேனை கூட்டணி தோ்தலுக்குப் பிறகு உடைந்ததால், சிவசேனை கட்சி, தேசியவாத காங்கிரஸுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. இதன் மூலம் ஆட்சி அதிகாரத்தில் பங்குபெற காங்கிரஸுக்கு வாய்ப்பு கிடைத்தது. சிவசேனையில் ஏற்பட்ட பிளவால் இரண்டரை ஆண்டுகளில் மகாராஷ்டிரத்தில் ஆட்சி காங்கிரஸ் அதிகாரத்தை இழந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.