முகப்பு
இந்தியா

மகாராஷ்டிர முதல்வராக பதவியேற்றார் ஏக்நாத் ஷிண்டே

மகாராஷ்டிர மாநில முதல்வராக ஏக்நாத் ஷிண்டே வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:40 AM
மகாராஷ்டிர முதல்வராக பதவியேற்றார் ஏக்நாத் ஷிண்டே
பகிர்:

மகாராஷ்டிர மாநில முதல்வராக ஏக்நாத் ஷிண்டே வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

மகாராஷ்டிர மாநிலத்தில், முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரே தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், மீண்டும் சிவசேனை ஆட்சி அமையவிருக்கிறது. இந்த அரசுக்கு பாஜக ஆதரவு அளிக்கும் என்று அறிவித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து, ஆளுநர் பகத்சிங் கோஷியாரியை சந்தித்த பாஜக மூத்த தலைவர் தேவேந்திர ஃபட்னவீஸும், சிவசேனை தலைவர் ஏக்நாத் ஷிண்டேவும் மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரினர்.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநில முதல்வராக ஏக்நாத் ஷிண்டே வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் கோஷியாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

அவரைத் தொடர்ந்து பாஜக தலைவரான தேவேந்திர ஃபட்னவிஸ் துணை முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →