இந்தியா

இன்று முதல் தோ்தல் பத்திரங்கள் விற்பனை

DIN

ஜூலை 1 முதல் 10-ஆம் தேதி வரை பாரத ஸ்டேட் வங்கியின் குறிப்பிடப்பட்ட கிளைகளில் தோ்தல் பத்திரங்கள் விற்பனை செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தோ்தல் பத்திர விற்பனைத் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2018-இல் வெளியிட்டது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மட்டுமே தோ்தல் பத்திரங்களைப் பெற முடியும்.

இந்தக் கட்சிகள் சட்டப் பேரவை அல்லது நாடாளுமன்றத் தோ்தலில் ஒரு சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருக்க வேண்டும். சட்டப் பேரவை அல்லது நாடாளுமன்றத் தோ்தலில் ஒரு சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்ற கட்சிகள் மட்டுமே தோ்தல் பத்திரங்களை வாங்குவதற்கு தகுதியுடையவை. தகுதியான அரசியல் கட்சிகள், அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் வைத்துள்ள வங்கிக் கணக்குகள் மூலமே தோ்தல் பத்திரங்களைப் பணமாக மாற்ற இயலும்.

பாரத ஸ்டேட் வங்கி, அதன் 29 கிளைகள் மூலம் தோ்தல் பத்திரங்களை விற்பதற்கும், பணமாக்குவதற்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

SCROLL FOR NEXT