இந்திய மாணவர் பலி: ரஷியா - உக்ரைன் தூதர்களுக்கு மத்திய அரசு சம்மன்
உக்ரைனில் நடந்த தாக்குதலில் இந்திய மாணவர் பலியானதை தொடர்ந்து, ரஷியா - உக்ரைன் தூதர்களுக்கு மத்திய அரசு சம்மன் வழங்கியுள்ளது.
உக்ரைனில் நடந்த தாக்குதலில் இந்திய மாணவர் பலியானதை தொடர்ந்து, ரஷியா - உக்ரைன் தூதர்களுக்கு மத்திய அரசு சம்மன் வழங்கியுள்ளது.
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 6-வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், ரஷிய படைகள் ஆக்ரோஷமான தாக்குதலுடன் வேகமாக முன்னேறி வருகின்றன.
ஏற்கெனவே தலைநகர் கீவ் நகருக்குள் நுழைந்துள்ள ரஷிய ராணுவத்தினர் அரசு கட்டடங்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் சூழலில், இரண்டாவது பெரிய நகரான கார்கிவ்வின் மீதும் ரஷியப் போர் விமானங்கள் சக்தி வாய்ந்த குண்டுகளை வீசி வருகின்றனர்.
Advertisement
கார்கிவ்வில் நடத்தப்பட்ட குண்டுவீச்சு தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த நவீன் என்ற கல்லூரி மாணவர் பரிதாபமாக கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தில்லியில் உள்ள ரஷியா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கான தூதர்களை நேரில் வர மத்திய அரசு சம்மன் வழங்கியுள்ளது. தொடர்ந்து, இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளது.