புது தில்லி: ரஷியா போர் தொடுத்திருக்கும் உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்து வர மத்திய அரசு நடத்தி வரும் ஆபரேஷன் கங்கா திட்டத்தில், இந்திய விமானப் படை விமானங்கள் பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்த்து வருகிறது.
உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்புத் தொடங்கி 8வது நாளை அடைந்திருக்கும் நிலையில், இந்தியர்களை மீட்கும் பணியில் தற்போது இந்திய விமானப் படை விமானங்கள் ஈடுபட்டு வருகின்றன.
இதையும் படிக்க.. சித்ரா ராமகிருஷ்ணா விற்பனை செய்த சென்னை பங்களா: அதுவும் எப்போது, யாருக்குத் தெரியுமா?
இந்திய விமானப் படைக்குச் சொந்தமான சி-17 ரக போக்குவரத்து விமானம் ஹங்கேரி, போலந்து, ருமேனியா ஆகிய உக்ரைனின் அண்டை நாடுகளிலிருந்து இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வருகிறது.
இந்த நிலையில், உக்ரைனிலிருந்து இந்தியர்களை மீட்கும் பணிக்கு, பாகிஸ்தான் வான்வழியை இந்திய விமானப் படை தவிர்த்துவிடுவது என்றும், எந்த வகையிலும் இஸ்லாமாபாத்திடமிருந்து இந்திய ராணுவம் உதவியைக் கோரக் கூடாது என்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ஒரு நாட்டின் பாதுகாப்புப் படை விமானங்கள், வேறு எந்தவொரு நாட்டின் வான்வழியைப் பயன்படுத்துவதாக இருந்தாலும், அந்த நாட்டிடமிருந்து பல்வேறு முன்அனுமதிகளைப் பெற வேண்டியது அவசியம். எனவே, தான் பாகிஸ்தானிடம் அதுபோன்ற எந்த ஒரு உதவியையும் கோர வேண்டாம் என்று வான்வழியே தவிர்த்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம், கூடுதலாக 30 நிமிடங்கள் பயண நேரம் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.