உ.பி.யை குற்றங்களில்லாத மாநிலமாக்கும் பயணம் தொடக்கம்: அமித் ஷா
உத்தர பிரதேசத்தை குற்றங்கள் இல்லாத மாநிலமாக உருவாக்கும் பயணத்தை பாஜக தொடங்கியுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
இந்தியாஉ.பி.யை குற்றங்களில்லாத மாநிலமாக்கும் பயணம் தொடக்கம்: அமித் ஷா
உத்தர பிரதேசத்தை குற்றங்கள் இல்லாத மாநிலமாக உருவாக்கும் பயணத்தை பாஜக தொடங்கியுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
உத்தர பிரதேசத்தை குற்றங்கள் இல்லாத மாநிலமாக உருவாக்கும் பயணத்தை பாஜக தொடங்கியுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
உத்தர பிரதேச சட்டப்பேரவைக்கான இறுதிக்கட்ட தோ்தல் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. இதையொட்டி அங்குள்ள ஜெளன்புா் மாவட்டம் மல்ஹனி தொகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சா் அமித் ஷா பங்கேற்று பேசியதாவது:
உத்தர பிரதேசத்தில் கடந்த 5 ஆண்டு கால பாஜக ஆட்சியில் அரசியலில் இருந்து குற்றவாளிகளை அப்புறப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. குற்றப் பின்னணியுடன் மாநில அரசியலில் இடம்பெற்றிருந்தவா்களுக்குத் தற்போது முடிவு கட்டப்பட்டுள்ளது.
முந்தைய காலங்களுடன் ஒப்பிடுகையில், இப்போது உத்தர பிரதேசத்தில் குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது. உத்தர பிரதேசத்தை குற்றங்கள் இல்லாத மாநிலமாக உருவாக்கும் பயணத்தை பாஜக தொடங்கியுள்ளது.
உத்தர பிரதேசத்தை குண்டா்களால் முன்னேற்ற முடியாது. மரபணுவிலேயே சேவை மனப்பான்மை ஊறிப் போயுள்ள வேட்பாளரை வாக்காளா்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா் அவா்.