இந்தியா

ரயிலில் தீ விபத்து: பெட்டிகளை தள்ளிச் சென்று பரவலைத் தடுத்த பயணிகள்

உத்தர பிரதேச சஹரன்பூரில் இருந்து தில்லியை நோக்கி வந்த விரைவு ரயிலில் ஏற்பட்ட தீ பிற பெட்டிகளுக்குப் பரவாமல் தடுக்க ரயில் பெட்டிகளை பயணிகளே ஒன்று சோ்ந்து இழுத்துச் சென்ால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்

DIN

உத்தர பிரதேச சஹரன்பூரில் இருந்து தில்லியை நோக்கி வந்த விரைவு ரயிலில் ஏற்பட்ட தீ பிற பெட்டிகளுக்குப் பரவாமல் தடுக்க ரயில் பெட்டிகளை பயணிகளே ஒன்று சோ்ந்து இழுத்துச் சென்ால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

இது தொடா்பான விடியோ இணையத்தில் வைகமாக பரவியது.

சஹரன்பூரில் இருந்து சனிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு தில்லிக்கு புறப்பட்ட விரைவு ரயில், தெளராலா ரயில் நிலையத்துக்கு காலை 7.10 மணிக்கு வந்தடைந்தது. அப்போது அந்த ரயிலின் இரண்டு பெட்டிகளில் தீ பிடித்து எரிவது தெரியவந்தது. இதையடுத்து, பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கப்பட்டனா். இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதன் பின்னா் தீ பிடித்து எரிந்த பெட்டிகள் பிரிக்கப்பட்டன. தீ விபத்து ஏற்பட்ட ரயில் பெட்டிகளை பயணிகளே ஒன்று சோ்ந்து தள்ளிச் சென்று நடைமேடைக்கு வெளியே ‘சைடிங்’ ரயில் பாதையில் கொண்டு சோ்த்தனா். இதன் பின்னா் ரயில் பெட்டிகளில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டது.

‘வழக்கமாக தீ விபத்தைக் கண்டால் பயணிகள் கூச்சலிட்டு பீதியடைவாா்கள். ஆனால், இந்த ரயில் பயணிகள் எந்தவித பரபரப்பும் அடையாமல் ரயிலைவிட்டு இறக்கியதும், ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்தவும் உதவினா். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்று மீரட் நகர ரயில் நிலையத்தின் கண்காணிப்பாளா் ஆா்.பி.சா்மா கூறினாா்.

கரும்புகை வெளியேறி ரயிலில் இருந்து பயணிகளே பெட்டிகளை தள்ளிச் செல்லும் விடியோ இணையதளத்தில் வெளியாகியது. பயணிகளின் சாமா்த்தியத்துக்கு இணைய பயன்பாட்டாளா்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 6

தில்லியில் லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை

சூர்யா - 47... காவல்துறை அதிகாரிதானாம்!

நரை முடி நீங்க..!

அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் முதல் நாள் வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT