இந்தியா

உ.பி. இறுதிக் கட்ட தேர்தல்: நாளை வாக்குப் பதிவு

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலின் 7-வது மற்றும் இறுதிக் கட்ட வாக்குப் பதிவு நாளை (திங்கள்கிழமை) நடைபெறுகிறது.

DIN


உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலின் 7-வது மற்றும் இறுதிக் கட்ட வாக்குப் பதிவு நாளை (திங்கள்கிழமை) நடைபெறுகிறது.

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், முதல் 6 கட்டங்களுக்கான வாக்குப் பதிவு நிறைவடைந்தது. இறுதிக் கட்டமாக 54 தொகுதிகளுக்கு நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவைத் தொகுதியான வாராணசி தொகுதிக்கும் நாளைதான் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

54 தொகுதிகளில் 11 தொகுதிகள் பட்டியலினத்தவர்களுக்கும், 2 தொகுதிகள் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

613 வேட்பாளர்களின் தலையெழுத்தைத் தீர்மானிக்கப்போகும் இந்த வாக்குப் பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. 2.06 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கிய சட்டப்பேரவைத் தேர்தல் நாளைய வாக்குப் பதிவுடன் நிறைவடைகிறது. மார்ச் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

பசும்பொன் தேவருக்கு ஓபிஎஸ், செங்கோட்டையன், தினகரன் இணைந்து அஞ்சலி!

திட்டமிட்டபடி திரைக்கு வரும் டாக்ஸிக்!

சாத் பூஜையை அவமதிக்கும் காங்கிரஸ், ஆர்ஜேடி: பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஏலியன்களின் பணி உரிமம் தானாக புதுப்பிப்பது நிறுத்தம்! வெளிநாட்டினர் குறித்து அமெரிக்கா!

SCROLL FOR NEXT