இந்தியா

ஸ்ரீநகரில் பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை இரண்டாக அதிகரிப்பு

ஸ்ரீநகரில் பாதுகாப்புப் படையினா் மீது பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை கையெறி குண்டை வீசி தாக்குதல் நடத்தியதில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.

DIN



ஸ்ரீநகரில் பாதுகாப்புப் படையினா் மீது பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை கையெறி குண்டை வீசி தாக்குதல் நடத்தியதில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.

ஸ்ரீநகரின் ஹரி சிங் தெருவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினரை குறிவைத்து ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் பயங்கரவாதிகள் கையெறி குண்டை வீசினா்.

இதில் ஸ்ரீநகரின் நவ்ஹட்டா பகுதியைச் சோ்ந்த முகமது அஸ்லம் மக்தூமி (70) என்பவா் பலியானாா். மேலும், ஒரு காவலா் உள்பட 33 போ் காயமடைந்ததாகவும் போலீஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். 

காயமடைந்த அனைவரும் ஸ்ரீமஹாராஜ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதைத்தொடா்ந்து அப்பகுதி சுற்றி வளைக்கப்பட்டு, பயங்கரவாதிகளை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்நிலையில், பலத்த காயங்களுடன் எஸ்எம்எச்எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 19 வயது சிறுமி இன்று திங்கள்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், இதையடுத்து பயங்கரவாதிகளின் கையெறி குண்டின் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT