இந்தியா

ரஷிய அதிபருடன் 50 நிமிடங்கள் பேசிய மோடி

DIN

ரஷிய அதிபர் விளாமிதீர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக 50 நிமிடங்கள் கலந்துரையாடியதாக அரசுத் தரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

உக்ரைன் மீது ரஷியப் படைகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பல்வேறு நாடுகள் ரஷியாவிற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், இந்தியா தொடர்ந்து நடுநிலை வகித்து வருகின்றது.

உக்ரைன் மற்றும் ரஷிய அதிபருடன் இந்திய பிரதமர் மோடி ஏற்கனவே கடந்த வாரம் போர் சூழல் குறித்து கலந்துரையாடினார்.

இந்நிலையில், இன்று பகலில் மீண்டும் உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட மோடி 35 நிமிடங்கள் பேசினார்.

இதனைத் தொடர்ந்து, ரஷிய அதிபர் புதினை தொடர்பு கொண்ட பிரதமர் மோடி அவரும் 50 நிமிடங்கள் வரை கலந்துரையாடியதாக அரசுத் தரப்பு தகவல் வெளியாகியுள்ளன.

மேலும், இந்த பேச்சின்போது, வடகிழக்கு முக்கிய நகரான சுமியில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ரஷியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என மோடி கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கையை ஏற்ற புதின், சுமியில் சிக்கியுள்ள இந்தியர்களை பாதுகாப்பாக விரைவில் மீட்க அனைத்து விதமான ஒத்துழைப்பும் அளிக்கப்படும் என உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுயமரியாதைக்காக விளையாட விரும்பினோம்: விராட் கோலி!

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு: சிவகங்கை 97.02% தேர்ச்சி பெற்று 2-ம் இடம்!

திருவாரூர் மாவட்டத்தில் 10ஆம் வகுப்பில் 92.49% தேர்ச்சி

வைகை அணையிலிருந்து நீர்த் திறப்பு: 4 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

அட்சய திருதியை: நகைக் கடைகளில் அலைமோதும் கூட்டம்

SCROLL FOR NEXT