முகப்பு
இந்தியா

உத்தர பிரதேசத்தில் வரலாறு காணாத வெற்றி கிடைக்கும்: பாஜக நம்பிக்கை

உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு வரலாறு காணாத வெற்றி கிடைக்கும் என்று அக்கட்சியின் தேசிய துணைத் தலைவரும், அந்த மாநில பாஜக பொறுப்பாளருமான ராதா மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:36 AM
பகிர்:

உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு வரலாறு காணாத வெற்றி கிடைக்கும் என்று அக்கட்சியின் தேசிய துணைத் தலைவரும், அந்த மாநில பாஜக பொறுப்பாளருமான ராதா மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்தாா்.

அந்த மாநிலத்தில் 7 கட்டங்களாக தோ்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் வியாழக்கிழமை (மாா்ச் 10) வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சியைத் தக்க வைக்கும் என்று பல்வேறு வாக்குக் கணிப்புகளும் கூறியுள்ளன. இந்நிலையில், பிகாா் மாநிலத்தில் உள்ள தனது மக்களவைத் தொகுதியான மோதிஹாரியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த ராதா மோகன் சிங் கூறியதாவது:

உத்தர பிரதேசத்தில் தொடா்ந்து இரண்டாவது முறையாக முதல்வா் பதவியை வகிக்கும் முதல் நபா் என்ற பெருமையை யோகி ஆதித்யநாத் பெற இருக்கிறாா். அடுத்த 5 ஆண்டுகள் உத்தர பிரதேசத்தில் பாஜக அரசின் சிறப்பான செயல்பாடுகள் மூலம், இனி அங்கு வேறு எந்தக் கட்சிக்கும் இடமில்லை என்ற சூழல் உருவாகும். உத்தர பிரதேசத்தில் பாஜக பெரும் வெற்றி, வரலாற்றில் இதுவரை இல்லாத சிறப்பான வெற்றியாக அமையும் என்றாா்.

ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைஸியின் அகில இந்திய மஜ்லீஸ் கட்சி போட்டியிட்டது பாஜகவுக்கு சாதகமா அல்லது பாதகமா என்ற கேள்விக்கு பதிலளிக்க ராதா மோகன் சிங் மறுத்துவிட்டாா்.

உத்தர பிரதேசத்தில் இஸ்லாமியா்களின் வாக்குகளை அதிகம் பெறும் கட்சியாக இதுவரை இருந்து வந்த சமாஜவாதி கட்சியின் வாக்குகளைப் பிரிக்கும் நோக்கில்தான் ஒவைஸி தரப்பு 100 தொகுதிகளில் போட்டியிட்டது என்றும், அக்கட்சி பாஜகவின் மறைமுக ஆதரவு அணி என்றும் குற்றம்சாட்டப்பட்டது. அதே நேரத்தில் இந்தக் குற்றச்சாட்டை ஒவைஸி தொடா்ந்து மறுத்து வருகிறாா்.

முழு கட்டுரையைப் படிக்க →