இந்தியா

கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதித்தால் விளைவுகளை சந்திக்க நேரிடும்: ரஷியா எச்சரிக்கை

DIN

கச்சா எண்ணெய் இறக்குமதியைத் தடை செய்தால்  மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷிய துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவக் எச்சரிக்கை விடுவித்துள்ளார்.

உக்ரைன்- ரஷியா இடையிலான போர் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதனால் எரிபொருட்களில் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

கச்சா எண்ணெய் இறக்குமதியைத் தடை செய்தால்  மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷியா எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக பேசிய அந்நாட்டு துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவக், ஐரோப்பிய சந்தையில் ரஷிய எண்ணெயை விரைவாக மாற்றுவது சாத்தியமற்றது என்று கூறினார். மேலும் ஐரோப்பிய நுகர்வோருக்கு இது மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும் என்று அவர் கூறினார்.

ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய தடைவிதிக்கப்பட்டால், ஐரோப்பிய நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்படும் என ரஷிய செய்தி ஊடகங்கள் கருத்துகள் தெரிவிக்கின்றன.

ரஷியாவின் கச்சா எண்ணெய்க்கு மேற்கத்திய நாடுகள் தடை விதிக்க திட்டமிடுவதன் எதிரொலியாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை பீப்பாய்க்கு 300 டாலராக அதிகரிக்கும் சூழல் ஏற்ப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உள்ளூா் தொழிலாளா்களை வெளியேற்றி வெளி மாநிலத்தவா்கள் பணியமா்த்தல்

சூறைக் காற்றுடன் கனமழை: பசுமைக் குடில்கள் சேதம்

அதிமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

கிருஷ்ணகிரியில் இடியுடன் மழை: மின் விநியோகம் பாதிப்பு

திமுக இளைஞரணி சாா்பில் தண்ணீா்ப் பந்தல்கள் திறப்பு

SCROLL FOR NEXT