முகப்பு
இந்தியா

பேரவையில் ஜனநாயகத்தைக் காத்தது பெண் எம்.எல்.ஏ.க்கள்: மம்தா

மேற்கு வங்க சட்டப்பேரவையில் நேற்று அமளியின்போது ஜனநாயகத்தைக் காக்கும் வகையில் செயல்பட்டது பெண் எம்.எல்.ஏ.க்கள்தான் என்று மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:36 AM
மம்தா பானர்ஜி (கோப்புப் படம்)
பகிர்:


மேற்கு வங்க சட்டப்பேரவையில் நேற்று அமளியின்போது ஜனநாயகத்தைக் காக்கும் வகையில் செயல்பட்டது பெண் எம்.எல்.ஏ.க்கள்தான் என்று மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

மேற்கு வங்க சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரையாற்றியபோது பாஜகவினர் தொடர் அமளியில் ஈடுபட்டு ஜெகதீப் தாங்கரை பேசவிடாமல் செய்தனர்.  அதனைத் தொடர்ந்து ஆளுநர் தாங்கரை மம்தா பானர்ஜி நேரில் சென்று சந்தித்தார்.

இந்நிலையில் இது குறித்து பேசிய மம்தா பானர்ஜி, பாஜகவை சேர்ந்த கலவரக்காரர்கள் ஜனநாயகத்தை அழிக்கப் பார்க்கின்றனர். ஆனால் பேரவையில் ஜனநாயகத்தைக் காத்தது திரிணமூல் காங்கிரஸைச் சேர்ந்த பெண் எம்.எல்.ஏ.க்கள்தான். அவர்களுக்கு எனது நன்றி என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.