மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே மின்சார ரயிலில் பெண்கள் அனைவரும் யோகா செய்து மகளிர் தினத்தைக் கொண்டாடினர்.
மும்பையிலிருந்து வடமேற்கு மகாராஷ்டிரத்திலுள்ள போரிவளி பகுதிக்கு செல்லும் உள்ளூர் ரயிலில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
உலகம் முழுவதும் இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில், நாள்தோறும் பணிக்குச் சென்று குடும்பத்திற்கு பொருளாதார ரீதியாகவும் உதவியாக இருக்கும் பெண்கள் உள்ளூர் ரயிலில் மகளிர் தினத்தைக் கொண்டாடினர்.
மும்பை - போரிவளி பகுதிக்குச் செல்லும் உள்ளூர் ரயிலில் மகளிர் சிறப்புப் பெட்டியில் பயணித்தப் பெண்கள் மனநலத்துடன் உடல் நலத்தையும் பேணும் வகையில், யோகா ஆசிரியரின் வழிகாட்டுதலின்படி யோகா செய்து மகளிர் தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.