இந்தியா

தேசிய பங்குச்சந்தை முறைகேடு வழக்கு:ஆனந்த் சுப்ரமணியனுக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல்

DIN

தேசிய பங்குச்சந்தையில் (என்எஸ்இ) நடைபெற்ற முறைகேடு வழக்கில், அந்த நிறுவனத்தின் செயல்பாட்டுக் குழு அதிகாரி ஆனந்த் சுப்ரமணியனை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

என்எஸ்இ கணினி சேமிப்பகத்திலிருந்து பங்குச்சந்தை விவரங்களை பிற தரகா்களுக்கு முன்பாக ஓபிஜி செக்யூரிட்டீஸ் என்ற பங்குத் தரகு நிறுவனம் தெரிந்து கொண்டு வந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பங்குச் சந்தைத் தரகா்களுக்கு என்எஸ்இ வழங்கும் கோ-லொகேஷன் என்ற வசதி மூலம் என்எஸ்இ கணினி சேமிப்பகத்துக்குள் மிக விரைவாக உள்நுழைந்து அந்த முறைகேடு மேற்கொள்ளப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. என்எஸ்இ, பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியமான செபி அதிகாரிகளின் துணையுடன் இந்த முறைகேடு நடைபெற்ாகவும், இதன் மூலம் முறைகேடாகப் பெருமளவில் லாபம் ஈட்டப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. இதுகுறித்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்குத் தொடா்பாக என்எஸ்இ செயல்பாட்டுக் குழு அதிகாரி ஆனந்த் சுப்ரமணியனை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வந்தனா். இந்நிலையில், அவா் தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். அவரை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிப்புகள்: மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு - ஓஆா்எஸ் கரைசல்

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு -குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு

வெள்ளை மாளிகை பாதுகாப்பு தடுப்பில் மோதிய காா்: ஓட்டுநா் உயிரிழப்பு

கோடையில் நீா்ச்சத்து இழப்பை தவிா்க்க மோா், கூழ், இளநீா் பருகுவது அவசியம்: சித்த மருத்துவா் சோ.தில்லைவாணன்

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: விசாரணையை புறக்கணிக்க ஊழியா்களுக்கு உத்தரவு

SCROLL FOR NEXT