இந்தியா

கோவாவில் பெரும்பான்மையைப் பெறுவது உறுதி: ப.சிதம்பரம்

DIN

கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையைப் பெறுவோம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

கோவா உள்பட உத்தரப் பிரதேசம், மணிப்பூர், பஞ்சாப், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (மார்ச் 10) நடைபெறவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் அந்தந்த மாநிலங்களில் இந்தியத் தேர்தல் ஆணையம் சார்பில் செய்யப்பட்டுள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதனையொட்டி கட்சித் தலைவர்கள் அந்தந்த மாநிலங்களில் முகாமிட்டுள்ளன. அந்தவகையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கோவாவிற்குச் சென்றுள்ளார். 

அப்போது ஏஎன்ஐ செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த அவர், கோவாவில் நிச்சயம் பெரும்பான்மை பெறுவோம் என்று கூறிச்சென்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆட்டநாயகி ஸ்மிருதி மந்தனா!

செல்போன் மூலம் இவிஎம்களில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை! -தேர்தல் ஆணையம்

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே 'ஒரே நாடு ஒரே கோரிக்கை': அகிலேஷ் யாதவ் வலியுறுத்தல்

உக்ரைனில் போர்நிறுத்தத்துக்கு வழிவகுக்குமா ஸ்விஸ் மாநாடு?

தென்னாப்பிரிக்காவை 143 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

SCROLL FOR NEXT