முகப்பு
இந்தியா

தந்தையின் பாலியல் வன்கொடுமை: 6 வயது சிறுமி தற்கொலை முயற்சி

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தந்தையின் வன்கொடுமையால் 6 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 9 மார்ச், 2022 at 7:20 PM
கோப்புப் படம்
பகிர்:

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தந்தையின் வன்கொடுமையால் 6 வயது சிறுமி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. குடகஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தந்தை தனது 6 வயது மகளுடன் தனியாக வீட்டில் இருந்துள்ளார். 

சிறுமியின் தாயார் உறவினரைச் சந்திப்பதற்காக வெளியூர் சென்றிருந்தாதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் தந்தை பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். 

இதனால் அச்சமடைந்த  சிறுமி அழுதுகொண்டு வீட்டிலிருந்து வெளியே ஓடியதால், தந்தை கடுமையாக தாக்கியதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 5ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவத்தைத் தொடர்ந்ந்து சிறுமி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தந்தையை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.