இந்தியா

உக்ரைனிலிருந்து நேபாளம், பாகிஸ்தானியர்களையும் மீட்கிறது இந்தியா: மத்திய அமைச்சர்

DIN

இந்தியர்களை மட்டுமல்லாமல், நேபாளம், வங்கதேசம், பாகிஸ்தானைச் சேர்ந்த குடிமக்களையும் மத்திய அரசு மீட்டு வருவதாக உணவு மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் பேசியதாவது, உக்ரைனில் போர்ப்பதற்றம் மிகுந்த இடத்திலிருந்து, நாடு திரும்ப வேண்டிய இறுதிக் குழுவைச் சேர்ந்த மாணவர்கள் மேற்கு பகுதிக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் உக்ரைனின் அண்டை நாடுகளை அடைவார்கள். அங்கிருந்து அவர்கள் தாயகம் அழைத்துவரப்படுவார்கள்.  

உக்ரைனிலிருந்து தங்கள் நாட்டு குடிமக்களை மீட்பதில் பல்வேறு நாடுகள் திணறுகின்றன. ஆனால் இந்தியா உக்ரைனின் அண்டை நாடுகளின் உதவியுடன் மக்களை மீட்டு வருகிறது. தங்களுடைய செல்லப் பிராணிகளுடன் பலர் தாயகம் திரும்புகின்றனர்.

இந்தியர்களை மட்டுமல்ல, நேபாளம், வங்கதேசம், பாகிஸ்தானைச் சேர்ந்த குடிமக்களையும் மத்திய அரசு மீட்டு வருகிறது. இதுவரை தாயகத்திற்கு அழைத்துவரப்பட்ட 18.5 ஆயிரம் மாணவர்களையும் எங்களது கட்சி பிரமுகர்கள் அவர்களது இல்லங்களில் சென்று சந்தித்துள்ளனர். பல மாணவர்களின் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர் என்று கூறினார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT