இந்தியா

உதம்பூரில் குண்டு வெடிப்பு: ஒருவர் பலி, 14 பேர் காயம்

DIN

ஜம்முவின், உதம்பூர் நகரில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே நடந்த குண்டுவெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டார். பலர் காயமடைந்தனர். 

இதுகுறித்து மூத்த காவல் கண்காணிப்பாளர் வினோத் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், 

உதம்பூர் நகரில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. வெடி விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 14 பேர் காயமடைந்துள்ளனர் என்றார். 

நிலைமையைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். உதம்பூர் தாசில்தார் அலுவலகம் அருகே ரெஹ்ரி அருகே இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒருவர் பலியாகியுள்ளார். காயமடைந்த 14 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். குண்டு வெடிப்பிற்கான சரியான காரணம் குறித்து விரைந்து விசாரிக்க ஆணையிட்டுள்ளது என்று சிங் டிவிட்டர் பதிவிட்டுள்ளார். 

இந்த விவகாரம் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுபடியும் டாஸ் தோல்வி: சிஎஸ்கே பேட்டிங்; அணியில் 2 மாற்றங்கள்!

சந்திரசேகர் ராவ் பிரசாரத்தில் ஈடுபடத் தேர்தல் ஆணையம் தடை!

பூர்ணிமை..!

புஷ்பா 2 படத்தின் முதல் பாடல்!

20 இடங்களில் சதமடித்த வெயில்! உஷ்ணத்தின் உச்சத்தால் தவிக்கும் தமிழகம்

SCROLL FOR NEXT