இந்தியா

குஜராத்தில் பாரம்பரிய மருந்துகளுக்கான உலக சுகாதார அமைப்பின் சர்வதேச மையம்

DIN

புது தில்லி: பாரம்பரிய மருந்துகளுக்கான உலக சுகாதார அமைப்பின் சர்வதேச மையத்தை இந்தியாவில் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், குஜராத்தின் ஜாம்நகரில், பாரம்பரிய மருந்துகளுக்கான உலக சுகாதார அமைப்பின் சர்வதேச மையத்தை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஆயுஷ் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் ஜாம்நகரில் அமைக்கப்பட உள்ள இந்த மையத்திற்காக, மத்திய அரசு உலக சுகாதார அமைப்புடன் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொள்ளும். இந்த மையம் பாரம்பரிய மருத்துவத்திற்காக, அதன் தலைமையிடத்திற்கு வெளியே அமைக்கப்படும் முதலாவது மற்றும் சர்வதேச மையமாக திகழும்.

இந்த மையம் அமைக்கப்படுவதன் மூலம் ஆயுஷ் மருத்துவமுறைகளை உலகம் முழுவதும் பரவச் செய்ய முடியும். அத்துடன் பாரம்பரிய மருத்துவம் தொடர்பான சர்வதேச சுகாதார விவகாரங்களில் இந்தியா தலைமை வகிக்கவும் வகை செய்யும். தரமான, பாதுகாப்பான, நோய்களை குணப்படுத்தக் கூடிய அதிக திறன் கொண்ட மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்வதுடன் பாரம்பரிய மருந்துகளை முறையாக பயன்படுத்தவும் இந்த மையம் உதவிகரமாக இருக்கும்.

ஐந்தாவது ஆயுர்வேத தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், 13 நவம்பர் 2020 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டாக்டர் டெட்ராஸ் அதோனம், இந்தியாவில் இந்த மையம் அமைக்கப்படும் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வருவாய் ஈட்டும் முதல் 10 ரயில் நிலையங்களில் தமிழ்நாடு முதலிடம்: தெற்கு ரயில்வே

கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள் கைது!

குருதியை வியர்வையாக்கி உலகை உயர்த்தும் உழைப்பாளர்கள்: மு.க.ஸ்டாலின்

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

SCROLL FOR NEXT