இந்தியா

பிரதமர் மோடி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள்: மகாராஷ்டிர முன்னாள் முதல்வர்

DIN

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுவருகிறது. பஞ்சாபில் ஆம் ஆத்மியும் மற்ற நான்கு மாநிலங்களில் பாஜகவும் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. 

கோவாவை பொறுத்தவரை அங்கு பாஜக 19 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. காங்கிரஸ் 12 இடங்களிலும் திரிணமூல், ஆம் ஆத்மி தலா மூன்று இடங்களிலும் வென்றுள்ளனர். மற்றவர்கள் மூன்று இடங்களில் வெற்றிபெற்றுள்ளனர்.

ஆட்சி அமைக்க இன்னும் 1 இடம் தேவைப்படும் நிலையில், மற்றவர்களுடன் இணைந்து பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர ஃபட்னவீஸ் கூறுகையில், "கோவா மக்கள் எங்களுக்கு அறுதிப் பெரும்பான்மை அளித்துள்ளனர். எங்களுக்கு 20 இடங்கள் அல்லது 1-2 இடங்கள் கூடுதலாக கூட கிடைக்கும். 

பிரதமர் மோடி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். சுயேச்சை வேட்பாளர்கள் எங்களுடன் வருகிறார்கள். எம்ஜிபியும் எங்களுடன் வருகிறார்கள். அனைவரையும் ஒன்றிணைத்து, நாங்கள் எங்கள் அரசை அமைப்போம்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

SCROLL FOR NEXT