இந்தியா

பாஜகவுக்கு மக்கள் வாக்களித்திருப்பதை புரிந்து கொள்ள முடியவில்லை: ஹரிஷ் சிங் ராவத்

DIN

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுவருகிறது. 70 தொகுதிகள் கொண்ட உத்தரகண்ட் மாநிலத்தில் பாஜக 48 தொகுதிகளில் முன்னிலை வகித்துவருகிறது. இதன் மூலம் பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. 

ஆனால், கதிமா தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் புஷ்கர் சிங் தாமி தோல்வியை தழுவியுள்ளார். அதேபோல, லால்குவான் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான ஹரிஷ் சிங் ராவத் 14,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி பெற்றுள்ளார்.

இந்நிலையில், காங்கிரஸ் தோல்வி குறித்து பேசியுள்ள ஹரிஷ் சிங் ராவத், "உத்தரகண்ட் பொதுமக்களின் நம்பிக்கையை வெல்வதற்கான எங்கள் முயற்சிகள் கொஞ்சம் குறைவாகவே இருந்தன. 

மக்கள் மாற்றத்திற்கு வாக்களிப்பார்கள் என்பதில் உறுதியாக இருந்தோம். எங்களின் முயற்சியில் பற்றாக்குறை இருந்திருக்க வேண்டும், அதை ஏற்றுக்கொண்டு தோல்விக்கு பொறுப்பேற்கிறேன். 

எங்களின் பிரசார உத்தி போதுமானதாக இல்லை. பிரச்சாரக் குழுவின் தலைவராக அதை ஏற்றுக்கொள்கிறேன். மக்கள் நன்றாக வேலை செய்தனர். அவர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். என்னால் மக்களின் நம்பிக்கையைப் பெற முடியவில்லை, ஆனால் எனது மகளையும் வெற்றி பெற்ற அனைத்து வேட்பாளர்களையும் வாழ்த்த விரும்புகிறேன். 

என்னைப் பொறுத்தவரை, முடிவுகள் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. இவ்வளவு பெரிய பணவீக்கத்திற்குப் பிறகு, இது பொது மக்களின் தீர்ப்பாக இருந்தால், மக்கள் நலன் மற்றும் சமூக நீதியின் வரையறை என்ன? இதற்கு பிறகும் மக்கள் 'பாஜக வாழ்க' என்று சொல்வதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சிகள்

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நடால்

மே தினம்: முதல்வா், தலைவா்கள் வாழ்த்து

வைக்கோல் கட்டு ஏற்றிவந்த மினி லாரியில் தீப்பிடித்து விபத்து

காங்கயம் சௌடேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா

SCROLL FOR NEXT