இந்தியா

பஞ்சாபில் 92 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி: வாக்கு எண்ணிக்கை நிறைவு

DIN


பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி 92 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை தொடங்கி நடைபெற்றது. 117 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை முழுவதுமாக நிறைவடைந்த நிலையில், ஆம் ஆத்மி 92 தொகுதிகளில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் 18 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 2 இடங்களில் வென்றுள்ளது. சிரோமணி அகாலி தளம் 3 இடங்களிலும், சுயேச்சை மற்றும் பகுஜன் சமாஜ் வேட்பாளர்கள் தலா 1 இடத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.

முன்னதாக, பஞ்சாப் மக்களின் புரட்சிக்கு ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் வாழ்த்து தெரிவித்தார்.

தொண்டர்கள் மத்தியில் பேசிய ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான், பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகைக்குப் பதில் பகத் சிங் அருங்காட்சியகம் அமைந்துள்ள கிராமத்தில் நடைபெறும் என அறிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

SCROLL FOR NEXT