முகப்பு
இந்தியா

நாட்டில் இதுவரை 180.61 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன: சுகாதாரத்துறை

நாட்டில் இதுவரை 180.61 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:37 AM
கரோனா தடுப்பூசி
பகிர்:

புது தில்லி: நாட்டில் இதுவரை 180.61 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 18,23,329 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரங்கள் குறித்த விவரங்களை மத்திய சுகாதாரத் துறை தினசரி வெளியிட்டு வருகின்றது. 

இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள தகவலின்படி,

நாட்டில் புதிதாக 4,184 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 4,29,72,009 ஆக உள்ளது. 

கடந்த 24 மணிநேரத்தில் 104 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,15,459-ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.20 சதவிகிதமாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →