மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால். 
இந்தியா

நல்லாட்சியால்தான் பாஜக தேர்தலில் வெற்றி பெற்றது: சர்பானந்தா சோனோவால்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இந்திய மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதில் கவனம் செலுத்தியதால்

DIN

புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இந்திய மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதில் கவனம் செலுத்தியதால் நான்கு மாநிலங்களில் வெற்றி பெற முடிந்தது என்று மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் வியாழக்கிழமை தெரிவித்தார். .

இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய சோனோவால், “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், மக்களுக்கு சமூகப் பாதுகாப்பை வழங்கவும் நல்லாட்சி வழங்குவதில் கவனம் செலுத்துகிறது” என்றார்.

மேலும், பாஜகவுக்கு வாய்ப்பளித்ததற்காக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புவதாக சர்பானந்தா சோனோவால் கூறினார்.

நடந்து முடிந்த தேர்தலில் அற்புதமான வெற்றியைப் பெற்ற உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங், கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் ஆகியோருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2026 தேர்தலில் இபிஎஸ்தான் முதல்வர்: நயினாா் நாகேந்திரன்

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

SCROLL FOR NEXT