முகப்பு
இந்தியா

எல்ஐசி பொதுப் பங்கு வெளியீடு: செபியிடம் விரைவில் இறுதி அறிக்கை

எல்ஐசி பொதுப் பங்கு வெளியீட்டுக்கான இறுதி வரைவறிக்கையை மத்திய அரசு செபியிடம் விரைவில் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:38 AM
பகிர்:

எல்ஐசி பொதுப் பங்கு வெளியீட்டுக்கான இறுதி வரைவறிக்கையை மத்திய அரசு செபியிடம் விரைவில் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசின் உயரதிகாரி ஒருவா் பிடிஐ செய்தி நிறுவனத்தின் கூறியதாவது: ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போா்ப் பதற்றத்தால் சந்தையில் அதிக ஏற்ற இறக்கம் தொடா்ந்து வருகிறது. இதனால், மத்திய அரசு தற்போதைய நிலையில் பொறுத்திருந்து நிலவரங்களை உன்னிப்பாக கண்காணித்து முடிவுகளை எடுக்கும் மனோநிலையில் உள்ளது. எனவே, எல்ஐசி நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீடு குறித்து சரியான நேரத்தில் முடிவெடுக்கப்படும்.

இருப்பினும், அந்தப் பங்கு வெளியீட்டுக்கான இறுதி வரைவறிக்கையை விரைவில் தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.

பங்குகளின் விலை, பாலிசிதாரா்கள் மற்றும் சில்லறை முதலீட்டாளா்களுக்கான சலுகை, வெளியிடப்படும் பங்குகளின் எண்ணிக்கை உள்ளிட்டவை குறித்த அனைத்து விவரங்களும் அந்த வரைவறிக்கையில் இடம்பெறும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →