ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு 
இந்தியா

இணையம் மூலம் ஆட்களை சேர்க்கும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள்...திடுக்கிடும் குற்றப்பத்திரிக்கை

களத்தில் நிதியுதவி பெறுவது மட்டுமல்லாமல் இணையத்தில் முறையான பிரசாரத்தை பயங்கரவாதிகள் மேற்கொண்டுள்ளதாக குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

DIN

இந்தியாவுக்கு எதிராக இஸ்லாமிய இளைஞர்களை ஈர்த்து, அவர்களுக்கு தீவிரவாதத்தை போதித்து, வன்முறை சம்வபங்களை கட்டவிழ்த்துவிட்டு, போரை தூண்ட தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு எப்படி எல்லாம் சதிச் செயலை தீட்டியது என்பது குறித்து குற்றப்பத்திரிக்கையில் தேசிய புலனாய்வு முகமை சேர்த்துள்ளது.

கொடூர குற்றங்கறளை செய்ய களத்தில் நிதியுதவி பெறுவது மட்டுமல்லாமல் இணையத்தில் முறையான பிரசாரத்தை பயங்கரவாதிகள் மேற்கொண்டுள்ளதாக குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்ரீநகரை சேர்ந்த அஃப்ஷான் பர்வைஸ் ஜராபி மற்றும் தவ்ஹீத் லத்தீஃப் சோஃபி ஆகிய ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை குற்றப்பத்திரிக்கையில் கூடுதல் தகவல்களை சேர்த்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழும் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம் 1967இன் கீழும் தில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பர்வைஸ் குறித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த தேசிய புலனாய்வு முகமை, "இவர் ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் அடிப்படையிலான ஐஎஸ்ஐஎஸ் செயல்பாட்டாளர்களுடன் தொடர்புடையவர். ஐஎஸ்ஐஎஸ்க்கு ஆள்சேர்ப்பதில் தீவிரமாக ஈடுபட்டார். 

உமர் நிசார் கைது செய்யப்பட்ட பிறகு, அவர் இந்தியாவில் ஐஎஸ்ஐஎஸ் நடவடிக்கைகளின் தலைவராக நியமிக்கப்பட்டார். ஐஎஸ்ஐஎஸ்ஸின் ஊடகங்கள் மற்றும் கள நடவடிக்கைகளையும் கையாண்டு வந்தார். அவர் பல்வேறு ஆன்லைன் தளங்கள் மூலம் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்துவந்தார்.

மற்றொரு குற்றவாளியான தவ்ஹீத் லத்தீஃப் சோபி, முன்பே குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த குற்றவாளிகளான உமர் நிசார் மற்றும் ஜுஃப்ரி ஜவார் தாமுதி ஆகியோரின் நெருங்கிய கூட்டாளியாக இருந்துள்ளார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓடிடியில் தலைவன் தலைவி: இந்த வாரம் வெளியாகும் படங்கள்!

உத்தரகண்ட்: பள்ளி வகுப்பறையில் ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட மாணவன்

ரஷிய அதிபருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!

ஓடிடியில் ஹரி ஹர வீர மல்லு!

காலை இரவு உணவைத் தவிர்த்தல் சரியா? டயட் முறைகள் உடலுக்கு நல்லதா? தவறான நம்பிக்கைகளும் உண்மையும்...

SCROLL FOR NEXT