இந்தியா

ஹிஜாப்: கர்நாடக உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு

ஹிஜாப் விவகார வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், கர்நாடக உயர் நீதிமன்றம் நாளை (செவ்வாய்க்கிழமை) தீர்ப்பளிக்கிறது.

DIN


ஹிஜாப் விவகார வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், கர்நாடக உயர் நீதிமன்றம் நாளை (செவ்வாய்க்கிழமை) தீர்ப்பளிக்கிறது.

கர்நாடகத்தில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவது தொடர்பாக சரச்சை எழுந்தது. இதன் பின்னணியில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு சீருடையில் மட்டுமே வர அறிவுறுத்தி கர்நாடக அரசு பிப்ரவரி 5-ம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது. அதை எதிர்த்து உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரி முஸ்லிம் மாணவிகள் உள்பட பலர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த மனுக்களை தலைமை நீதிபதி ரித்துராஜ் அவஸ்தி தலைமையிலான அமர்வு பிப்ரவரி 10-ம் தேதி முதல் தினமும் விசாரித்து வந்தது. 11 நாள்களாக இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில் வழக்கின் தீர்ப்பானது கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நாளை வாசிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

SCROLL FOR NEXT