நாட்டில் குறையும் கரோனா பாதிப்பு: புதிதாக 2,568 பேருக்கு கரோனா
இந்தியாவில் புதிதாக 2,568 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் புதிதாக 2,568 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,568 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 97 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 4,24,46,171 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,15,974 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி 33,917 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தடுப்பூசி:
கடந்த 24 மணி நேரத்தில் 19,64,423 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 1,80,40,28,891 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.