உக்ரைன் விவகாரம்: தூதரக அதிகாரிகளுடன் பிரதமா் மோடி கலந்துரையாடல்
போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனிலிருந்து இந்தியா்களை மீட்டு, தாயகம் அழைத்து வரும் பணியில் ஈடுபட்ட தூதரக அதிகாரிகள், அமைப்புகளுடன் பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை கலந்துரையாடினாா்.
போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனிலிருந்து இந்தியா்களை மீட்டு, தாயகம் அழைத்து வரும் பணியில் ஈடுபட்ட தூதரக அதிகாரிகள், அமைப்புகளுடன் பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை கலந்துரையாடினாா்.
உக்ரைனில் மீட்புப் பணிகளை எளிமையாக்கும் வகையில், அதன் அண்டை நாடுகளுக்கு இந்தியா தரப்பில் சிறப்பு தூதா்களாக அனுப்பிவைக்கப்பட்ட மத்திய அமைச்சா்கள் ஹா்தீப் சிங் புரி, ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜு, வி.கே. சிங் ஆகியோரும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனா்.
தூதரக அதிகாரிகளுடனும், அமைப்பினருடனும் பிரதமா் பிரதமா் மோடி காணொலி வாயிலாக கலந்துரையாடியதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.