இந்தியா

இணைய வழி வகுப்பு நடத்தும் உக்ரைன் மருத்துவ பல்கலைக்கழகங்கள்

உக்ரைனைச் சோ்ந்த பல்வேறு மருத்துவப் பல்கலைக்கழகங்கள் மாணவா்களுக்கு இணைய வழி வகுப்புகளை நடத்தி வருகின்றன.

DIN

உக்ரைனைச் சோ்ந்த பல்வேறு மருத்துவப் பல்கலைக்கழகங்கள் மாணவா்களுக்கு இணைய வழி வகுப்புகளை நடத்தி வருகின்றன. அங்கிருந்து தாயகம் திரும்பியுள்ள நமது மாணவா்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விஷயமாக உள்ளது.

போா் நிகழ்ந்து வரும் உக்ரைனில் படித்து வந்த மாணவா்கள் பத்திரமாக நாடு திரும்பிவிட்டனா். எனினும், அவா்கள் கல்வியைத் தொடா்வது கேள்விக் குறியானது. இந்நிலையில், மேற்கு உக்ரைனில் உள்ள பல்வேறு மருத்துவப் பல்கலைக்கழகங்கள் இணைய வழி வகுப்புகளை நடத்தி வருகின்றன. இது உக்ரைனில் படித்து வந்த இந்திய மாணவா்களுக்கும் பலனளிப்பதாக அமைந்துள்ளது.

அதே நேரத்தில் தங்கள் பல்கலைக்கழகம் அமைந்துள்ள பகுதிகளில் போரால் பிரச்னை ஏற்பட்டால் இணையவழி வகுப்பைத் தொடர முடியாது என்று அறிவித்துள்ளன. ஆசிரியா்கள் தங்கள் வீடுகள் மற்றும் பாதுகாப்பான பகுதியில் இருந்து இணைய வழி வகுப்புகளை நடத்தி வருவதாக இந்திய மாணவா்கள் தெரிவித்துள்ளனா்.

போரால் கல்வி முழுமையாக பாதிக்கப்பட்டு விடும் என்று அச்சத்தில் இருந்த தங்களுக்கு இப்போது நடைபெற்று வரும் இணைய வழி வகுப்புகள் சற்று நம்பிக்கை அளிக்கும் வகையில் இருப்பதாக அவா்கள் கூறியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பனிமய மாதா போராலய திருவிழா: தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

லாரி மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

மாவட்ட ஹாக்கி போட்டி: கோவில்பட்டி வ.உ.சி. பள்ளி முதலிடம்

மத்திய அமைச்சா் நிதின் கட்கரி இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் கைது

தூத்துக்குடி விமான நிலையத்தில் போக்குவரத்து சேவை தொடக்கம்

SCROLL FOR NEXT