குருதாஸ் மான் 
இந்தியா

ஆம் ஆத்மி அரசுக்காக கடவுளிடம் வேண்டும் பஞ்சாப் பாடகர்

பஞ்சாபில் புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆம் ஆத்மி அரசு வளம் நிறைந்த மாநிலத்தை உருவாக்க போதிய உறுதியை அளிக்க கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்: பஞ்சாப் பாடகர் குருதாஸ் மான்

DIN

பஞ்சாபில் புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆம் ஆத்மி அரசு வளம் நிறைந்த மாநிலத்தை உருவாக்க போதிய உறுதியை அளிக்க கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் என்று பஞ்சாப் பாடகர் குருதாஸ் மான் தெரிவித்துள்ளார். 

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இன்று அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் சிங் பஞ்சாப் முதல்வராக இன்று (மார்ச்16) பதவியேற்றுக்கொண்டார்.

பகத் சிங்கின் சொந்த கிராமமான கட்கர் களானில் இன்று (மார்ச் 16) பதவியேற்பு விழா நடைபெற்றது. அவருடன் 16 எம்எல்ஏ-க்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். 

இந்த நிகழ்விற்காக 100 ஏக்கர் பரப்பளவில் விழா அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கலந்துகொண்ட பஞ்சாப் பாடகர் குருதாஸ் மான், ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் 62 தொகுதிகளை வென்றுள்ளது. அவர்களுடைய கொள்கை தனித்துவமானது. வளம் மிக்க பஞ்சாபை உருவாக்குவதற்கான உறுதியை அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

SCROLL FOR NEXT