புவனேஸ்வரம்: ஒடிசா மாநிலம் சுந்தர்கார் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர், அதே பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவியுடன் காணாமல் போன நிலையில், அவர்கள் பிகாரில் பிடிபட்டனர்.
இது குறித்து காவலர்கள் கூறுகையில், ஜோகேஷ் ஷர்மா என்ற ஆசிரியர், அதே பள்ளியில் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவிக்கு காதல் ஆசை காட்டி, பிகாருக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
கடந்த 5ஆம் தேதி ஒடிசாவிலிருந்து தப்பி பிகாருக்குச் சென்ற நிலையில், மாணவியின் தந்தை புகார் அளித்ததன் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது.
காவலர்கள் நடத்திய தீவிர விசாரணையில், பிகார் மாநிலம் சிவன் மாவட்டத்தில் தங்கியிருந்த ஆசிரியர் மற்றும் மாணவியை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். மாணவி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். ஆசிரியர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.