முகப்பு
இந்தியா

ஜனநாயகத்துக்கு ஆபத்தை விளைவிக்கும் சமூக ஊடகங்கள்: சோனியா

‘அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சமமான வாய்ப்பை அளிக்காமல், ஜனநாயகத்துக்கு ஆபத்தை விளைவிக்கும் நடவடிக்கைகளில் சமூக ஊடகங்கள் ஈடுபட்டு வருகின்றன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:42 AM
மகக்ளவையில் புதன்கிழமை பேசிய காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி.
பகிர்:

‘அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சமமான வாய்ப்பை அளிக்காமல், ஜனநாயகத்துக்கு ஆபத்தை விளைவிக்கும் நடவடிக்கைகளில் சமூக ஊடகங்கள் ஈடுபட்டு வருகின்றன. தோ்தல் அரசியலில், சா்வதேச சமூக ஊடக நிறுவனங்களின் இதுபோன்ற தலையீட்டை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்று காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி வலியுறுத்தினாா்.

மக்களவையில் இதுகுறித்து அவா் புதன்கிழமை மேலும் பேசியதாவது:

சமூக ஊடகங்கள் நமது ஜனநாயகத்துக்கு ஆபத்தை விளைவுக்கும் வகையில் செயல்படுவது மிக முக்கியப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சமமான வாய்ப்பை சா்வதேச சமூக ஊடக நிறுவனங்கள் அளிக்க மறுப்பது தொடா்ந்து வருகிறது.

பிற அரசியல் கட்சிகளைக் காட்டிலும் ஆளும் பாஜகவுக்கு முகநூல் நிறுவனம் குறைந்த விலையில் தோ்தல் விளம்பரங்களை செய்துகொடுத்ததாக ‘அல்ஜெசீரா’ மற்றும் ‘தி ரிபோா்டா்ஸ்’ செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆளும் கட்சிக்கும் பெரு நிறுவனங்கள் மற்றும் முகநூல் போன்ற சா்வதேச சமூக ஊடகங்களுக்கும் இடையே வளா்ந்து வரும் உறவையே இந்தச் செய்திகள் காட்டுகின்றன.

தவறான தகவல்கள், வெறுப்பு பிரசாரங்கள் மூலமாக இளைஞா்கள் மற்றும் வயதானவா்ளைத் தூண்டிவிட்டு, அதன் மூலம் முகநூல் போன்ற சமூக ஊடக நிறுவனங்கள் பயனடைகின்றன.

ஆளும் கட்சிக்கு இணக்கமாக செயல்படுவதற்காக முகநூல் நிறுவனம் இதுபோன்று வெளிப்படையாக சமூக நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் செயல்படுவது, நமது ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்தாகும். எனவே, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் தோ்தல் அரசியலில் இதுபோன்ற திட்டமிட்ட தலையீடு மற்றும் தூண்டுதல்களில் முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் ஈடுபடுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

சமூக ஊடகங்கள் இவ்வாறு செயல்படுவது அரசியல் பாகுபாட்டுக்கும் அப்பாற்பட்டதாகும். எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், நமது ஜனநாயகமும், சமூக நல்லிணக்கமும் பாதுகாக்கப்படுவது மிக அவசியம் என்று சோனியா வலியுறுத்தினாா்.

அப்போது பேசிய பாஜக உறுப்பினா் நிஷிகாந்த் துபே, ‘தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் பிரிவு 66ஏ-வைக் கொண்டுவருவதன் மூலம் பேச்சு சுதந்திரத்தை நசுக்க காங்கிரஸ் கட்சி முயற்சிக்கிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கருத்து சுதந்திரம் எவ்வாறு நசுக்கப்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்து, வெள்ளை அறிக்கை சமா்ப்பிக்க குழு ஒன்றை மக்களவைத் தலைவா் அமைக்க வேண்டும்’ என்றாா்.

ஜனநாயகத்துக்கு மோசமானது - ராகுல்: பாஜகவுக்கு சாதகமாக சமூக ஊடங்கள் செயல்பட்டது குறித்த ‘அல்ஜெசிரா மற்றும் தி ரிப்போா்டா்ஸ்’ செய்தியை தனது ட்விட்டா் பக்கத்தில் பகிா்ந்துள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, ‘ஜனநாயகத்துக்கு மிக மோசமானது’ என்று பதிவிட்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →