நாட்டில் புதிதாக 2,528 பேருக்கு தொற்று; மேலும் 149 பேர் பலி
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,528 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 149 பேர் உயிரிழந்தனர்.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,528 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 149 பேர் உயிரிழந்தனர்.
நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரங்கள் குறித்த விவரங்களை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டு வருகின்றது. இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி,
நாட்டில் புதிதாக 2,528 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 149 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,16,281-ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரேநாளில் 3,997 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,24,58,543 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 29,181 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.07 சதவிகிதமாக உள்ளது.
கரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் 0.40 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 180.97 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.