முகப்பு
இந்தியா

அசாமில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனம் விபத்து: வீரர் பலி

அசாமில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனம் விபத்து: வீரர் பலிஅசாமில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனம் நீர்நிலையில் கவிழ்ந்ததில் வீரர் ஒருவர் பலியானார். 

Updated On : 18 மார்ச், 2022 at 9:50 PM
பகிர்:

அசாமில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனம் விபத்து: வீரர் பலி
அசாமில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனம் நீர்நிலையில் கவிழ்ந்ததில் வீரர் ஒருவர் பலியானார். 

அசாம் மாநிலம், தெற்கு சல்மாரா மங்காச்சார் மாவட்டத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனம் திடீரென கட்டுப்பாடை இழந்து ஜௌடாங்கா பகுதியில் உள்ள 20-30 அடி ஆழமான நீர்நிலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த சம்பவத்தில் வீரர் ஒருவர் நீரில் மூழ்கி பலியானார்.

Advertisement

மற்றொருவர் மாயமானார். 3 பேர் நீந்தி கரைக்குத் திரும்பினர். தற்போது வரை ஒரு சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் மாயமானவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரி தெரிவித்தார். 

இதற்கிடையில், எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகாரிகள், மாவட்ட காவல்துறை மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.