முகப்பு
இந்தியா

பாலியல் தொழிலில் ஈடுபட்ட கும்பல்...சின்னத்திரை நடிகை உள்பட மூன்று பெண்கள் மீட்பு

மீட்கப்பட்ட இரண்டு பெண்கள் விரார் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் மற்றொரு பெண், ஹைதராபாத்தை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

Updated On : 18 மார்ச், 2022 at 3:31 PM
கோப்புப்படம்
பகிர்:

கோவா பனாஜி அருகே சங்கொல்டா கிராமத்தில் பாலியல் தொழலில் ஈடுபட்ட கும்பல் ஒன்று பிடிபட்டுள்ளது. இதுதொடர்பாக ஹைதராபத்தை சேர்ந்த நபர் ஒருவரை கோவா குற்றப்பிரிவு காவல்துறை கைது செய்துள்ளது. மேலும், சின்னத்திரை நடிகை உள்பட மூன்று பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து கோவா குற்றப்பிரிவு காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், "மீட்கப்பட்ட இரண்டு பெண்கள் விரார் பகுதியை சேர்ந்தவர்கள். மற்றொரு பெண், ஹைதராபாத்தை சேர்ந்தவர். ஹபீஸ் சையத் பிலால் என்ற நபர் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக குற்றப் பிரிவுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி அவரை பிடிக்க பொறி வைக்கப்பட்டது.

கிடைத்த தகவல் உறுதி செய்யப்பட்ட பிறகு, ஹைதராபாத்தை சேர்ந்த குற்றம் சாட்டப்பட்ட நபரை 50,000 ரூபாய் ஒப்பந்தம் மேற்கொள்ளலாம் எனக் கூறி வரவழைத்தோம். மார்ச் 17ஆம் தேதி, விடுதியில் வைத்து 26 வயதான அவரை கைது செய்தோம். 30 முதல் 37 வயது வரையிலான மூன்று பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.