இந்தியா

பள்ளிக் குழந்தைகளுடன் ஹோலி கொண்டாடிய குடியரசு துணைத் தலைவர்

புதுதில்லியில் உள்ள குடியரசு துணைத்தலைவர் மாளிகையில், குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு இன்று பள்ளிக் குழந்தைகள் மற்றும் தமது அலுவலகப் பணியாளர்களுடன் ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடினார்.

DIN

புதுதில்லியில் உள்ள குடியரசு துணைத்தலைவர் மாளிகையில், குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு இன்று பள்ளிக் குழந்தைகள் மற்றும் தமது அலுவலகப் பணியாளர்களுடன் ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடினார்.

தில்லி மாநகராட்சி பள்ளிகள் உட்பட  நான்கு பள்ளிக்கூடங்களைச் சேர்ந்த மாணவர்கள் குடியரசு துணைத்தலைவர் மாளிகைக்கு சென்று, ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். அப்போது பள்ளிக் குழந்தைகள் மிகுந்த ஆர்வத்துடன் தேசப்பக்தி பாடல்களைப் பாடியதைக் கேட்டு குடியரசு துணைத்தலைவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.

அப்போது இளைஞர்கள் தங்களது தாய், தாய்நாடு, மற்றும் தாய்மொழியை எப்போதும் நேசிப்பதோடு உரிய மரியாதையும் அளிக்க வேண்டும் என குடியரசு துணைத்தலைவர் அறிவுறுத்தினார். முன்னதாக, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் தொலைபேசியில் ஹோலிப் பண்டிகை வாழ்த்தைப் பரிமாறிக் கொண்டனர். 

பிரதமர் மோடி, ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு தமது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து குடியரசு துணைத்தலைவருக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என் வகுப்புத் தோழன்..! மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்!

எங்கள் தோல்விக்குக் காரணம் ஹார்திக் பாண்டியா..! தெ.ஆ. பயிற்சியாளர் புகழாரம்!

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

SCROLL FOR NEXT