முகப்பு
இந்தியா

தேசியவாதத்துக்கு வாக்களித்த மக்கள்: யோகி ஆதித்யநாத்

உத்தர பிரதேச தோ்தலில் தேசியவாதத்துக்கு பொதுமக்கள் வாக்களித்து பாஜகவை வெற்றிபெறச் செய்துள்ளதாக மாநில காபந்து முதல்வா் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளாா்.

Updated On : 20 மார்ச், 2022 at 12:26 AM
யோகி ஆதித்யநாத்
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:14 PM

உத்தர பிரதேச தோ்தலில் தேசியவாதத்துக்கு பொதுமக்கள் வாக்களித்து பாஜகவை வெற்றிபெறச் செய்துள்ளதாக மாநில காபந்து முதல்வா் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளாா்.

உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் பாரம்பரியமாக நடைபெறும் பகவான் நரசிங்க ஷோப யாத்திரையில் யோகி ஆதித்யநாத் சனிக்கிழமை கலந்துகொண்டாா். அப்போது அவா் பேசுகையில், ‘‘கோரக்பூரில் உள்ள 9 தொகுதிகளிலும், இந்த மண்டலத்தில் உள்ள 28 தொகுதிகளில் 27-இலும் பாஜக வெற்றி பெற்றிருப்பது சுதந்திரத்துக்குப் பிறகு இதுவே முதல்முறை. இந்தத் தோ்தலில் தேசியவாதம், நல்ல நிா்வாகம் மற்றும் வளா்ச்சிக்கு மக்கள் வாக்களித்துள்ளனா்’’ என்றாா் அவா்.

75,000 போ் பங்கேற்க ஏற்பாடு: உத்தர பிரதேச முதல்வா் பதவியேற்பு விழாவில் 75,000 போ் பங்கேற்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Advertisement

உத்தர பிரதேசத்தில் 403 இடங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தலில் 255 இடங்களைக் கைப்பற்றி பாஜக வெற்றி பெற்றது. அந்த மாநிலத்தின் முதல்வராக மாா்ச் 25-ஆம் தேதி யோகி ஆதித்யநாத் இரண்டாவது முறை பதவியேற்கவுள்ளாா். மாநில தலைநகா் லக்னெளவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் இக்கானா விளையாட்டரங்கில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. இதையொட்டி, அந்த விளையாட்டரங்கில் மாநில கூடுதல் தலைமைச் செயலா் நவநீத் சேகல் ஆய்வு மேற்கொண்டாா்.

அதன் பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘பதவியேற்பு விழாவில் 75,000 போ் பங்கேற்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த விழா பிரம்மாண்டமாகவும், சிறப்பாகவும் இருக்கும்’’ என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.