நாட்டில் புதிதாக 1,761 பேருக்கு கரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,761 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,761 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 1,761 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 4,30,07,841 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 127 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 5,16,479 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 3,196 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 4,24,65,122 பேர் குணமடைந்துள்ளனர்.
இன்றைய நிலவரப்படி 26,240 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தடுப்பூசி:
நாட்டில் இதுவரை மொத்தம் 1,81,21,11,675 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.