இந்தியா

உ.பி.யில் ஹோலி கொண்டாட்டத்தின்போது தண்ணீர் பலூன் வீசியதால் கவிழ்ந்த ஆட்டோ

DIN

உ.பி.யில் ஹோலி கொண்டாட்டத்தின்போது தண்ணீர் பலூன் வீசியதால் சாலையில் சென்ற ஆட்டோ திடீரென கவிழ்ந்தது. 

வசந்த காலத்தை வரவேற்கும் வகையில், வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை ஆண்டுதோறும் மார்ச் 18ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. வண்ணப் பொடிகளைத் தூவி ஒருவருக்கொருவா் வாழ்த்துகளை கூறி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில், இந்தப் பண்டிகை அமைகிறது.

அதன்படி இந்தாண்டு ஹோலி பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் உ.பி.யின் பாக்பத் பகுதியில் உள்ள சாலையில் ஹோலியன்று பயணிகளுடன் ஆட்டோ ஒன்று வேகமாக சென்றுகொண்டிருந்தது.

அப்போது ஹோலி கொண்டாட்டம் என்கிற பெயரில் சாலையோரத்தில் இருந்த இருவர் ஆட்டோவின் மீது தண்ணீர் பலூன் வீசினர். இந்த சம்பத்தில் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ திடீரென சாலையில் கவிழ்ந்தது. இதில் ஆட்டோ ஓட்டுநர் உள்பட இருவர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பலூன் வீசியவர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். தப்யோடிவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

கேண்டி மலையில் ஆண்ட்ரியா!

SCROLL FOR NEXT