முகப்பு
இந்தியா

பிஎஸ்-6 டீசல் வாகனங்களைப் பதிவு செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி

பொதுப் பயன்பாட்டுக்கான பிஎஸ்-6 இலகுரக மற்றும் கனரக டீசல் வாகனங்களைப் பதிவு செய்வதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:45 AM
உச்சநீதிமன்றம்
பகிர்:

பொதுப் பயன்பாட்டுக்கான பிஎஸ்-6 இலகுரக மற்றும் கனரக டீசல் வாகனங்களைப் பதிவு செய்வதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பிஎஸ்-6 டீசல் வாகனங்களின் பதிவுக்கு அனுமதி வழங்கக் கோரி சுற்றுச்சூழலியலாளா் எம்.சி.மேத்தா உள்ளிட்டோா் சாா்பில் பொதுநல மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு தொடா்பாக நீதிமன்றத்துக்கு உதவ வழக்குரைஞா் ஏ.டி.என்.ராவ் நியமிக்கப்பட்டாா்.

அவா் அளித்த அறிக்கையில், பொதுப் பயன்பாட்டுக்கும் அத்தியாவசிய சேவைகளுக்கும் பயன்படும் பிஎஸ்-6 இலகுரக மற்றும் கனரக டீசல் வாகனங்களைப் பதிவு செய்வதற்கு அனுமதி அளிக்கலாம் எனப் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

இது தொடா்பான விசாரணை, நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆா்.கவாய் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘‘பிஎஸ்-6 இலகுரக, கனரக டீசல் வாகனங்களைப் பதிவு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. வாகனங்களைப் பதிவு செய்யும் அதிகாரிகள், இந்த விவகாரம் தொடா்பான நீதிமன்ற உத்தரவை சமா்ப்பிக்குமாறு வாகன உரிமையாளரைக் கட்டாயப்படுத்தக் கூடாது’’ என்றனா்.

கடந்த 2020-ஆம் ஆண்டு ஏப்ரலில் இருந்து பிஎஸ்-6 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீா் கடந்த 2019-ஆம் ஆண்டில் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்ட பிறகு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மற்றும் இணையசேவைகள் முடக்கம் காரணமாக பிஎஸ்-4 வாகனங்களை விற்க முடியாத சூழல் நிலவியதாக உச்சநீதிமன்றத்தில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஜம்மு-காஷ்மீரில் பிஎஸ்-4 வாகனங்களை விற்பதற்குத் தளா்வு வழங்கப்பட வேண்டுமென அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இது தொடா்பாக ஜம்மு-காஷ்மீா் உயா்நீதிமன்றத்தில் முறையிடுமாறு மனுதாரரிடம் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →