இந்தியா

மக்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார் அகிலேஷ் யாதவ்

DIN

உத்தரப் பிரதேசம் சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றி பெற்றதை தொடர்ந்து மக்களவை உறுப்பினர் பதவியை சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று ராஜிநாமா செய்தார்.

உத்தரப் பிரதேசம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியானது எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது.

இந்த தேர்தலில் கர்ஹல் தொகுதியில் போட்டியிட்ட அகிலேஷ் யாதவ் வெற்றி பெற்றார்.

இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவை நேரில் சந்தித்த அகிலேஷ் யாதவ், அலம்கர் தொகுதி மக்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்யும் கடிதத்தை வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT