நாட்டின் தங்கம் இறக்குமதி 651 டன்
நாட்டின் தங்கம் இறக்குமதி 2020-21-ஆம் நிதியாண்டில் 651.24 டன்னாக இருந்தது என மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.
நாட்டின் தங்கம் இறக்குமதி 2020-21-ஆம் நிதியாண்டில் 651.24 டன்னாக இருந்தது என மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சா் அனுப்பிரியா பாட்டீல் மக்களவையில் தெரிவித்ததாவது:
கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் இந்தியா 651.24 டன் தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது. முந்தைய 2019-20-ஆம் நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 719.94 டன்னாகவும், 2018-19-இல் 982.71 டன்னாகவும் இருந்தன.
பொம்மை, விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்டவை சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுவது படிப்படியாக குறைந்து வருகிறது.
அதன்படி 2018-19-ஆம் நிதியாண்டில் 45.17 கோடி டாலராக அதிகரித்து காணப்பட்ட சீனப் பொருள்களின் இறக்குமதி 2021-இல் (2021 ஏப்ரல் முதல் 2022 ஜனவரி வரை) 20.61 கோடி டாலராக சரிவடைந்துள்ளது என்றாா் அவா்.